புத்தகத்திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி :
ஈரோடு புத்தகத் திருவிழாவின் குறிப்பிடத்தகுந்த அம்சங்களில் ஒன்று ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பேச்சுப் போட்டியாகும். இது கொங்கு மண்டல அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பரபரப்பான போட்டி. இதுவரை நூற்றுக் கணக்கான மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வர்கள் மூலமாக அதிகார பூர்வக் கடிதம் பெற்று பேரவைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இன்றும் மாணவர்களின் பெயர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பேச்சுப் போட்டியை உயிரோட்டமாகவும் முறையாகவும் நடத்துவதற்கு பேரவைப் பொறுப்பாளர்கள் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
|